வெப் சீரிஸ்களை குறிவைக்கும் தமிழ் சினிமா இயக்குனர்கள்! இதுதான் காரணமா?

Webdunia
சனி, 8 ஆகஸ்ட் 2020 (20:06 IST)
லாக்டவுன் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இயக்குனர்கள் வெப் சீரிஸ் பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளன.

தமிழ் சினிமாவுக்கான படப்பிடிப்புகள் கடந்த மார்ச் மாதம் முதல் நடத்தப்படவில்ல. இதனால் தமிழ் சினிமாவில் உருவாகி வந்த 100 க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மீண்டும் படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் என்பதும் தெரியாத நிலையில் வெப் சீரிஸ் பக்கம் செல்ல ஆரம்பித்துள்ளனர் தமிழ் சினிமா இயக்குனர்கள்.

இதற்கு முக்கியக் காரணம் தொலைக்காட்சி மற்றும் வெப் சீரிஸ்களின் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பதே ஆகும். இதன் முதல் கட்டமாக பா ரஞ்சித், வெங்கட்பிரபு மற்றும் ராஜேஷ் ஆகியவர்கள் அதற்கான முதல் கட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்