வாடிவாசல் எப்பதான் தொடங்கும்?... ஒரு வழியாக அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!

vinoth
சனி, 1 மார்ச் 2025 (10:33 IST)
விடுதலை படத்தை வெற்றிமாறன் தொடங்கும் முன்பே ‘வாடிவாசல்’ படத்தை சூர்யா மற்றும் தயாரிப்பாளர் தாணுவோடு இணைந்து அறிவித்தார். ஆனால் சிறிய பட்ஜெட்டில் தொடங்கிய விடுதலை நான்கு ஆண்டுகளுக்கு மேல் இழுத்துக் கொண்டதால் இன்னும் ‘வாடிவாசல்’ தொடங்கப்படவில்லை.

தற்போது விடுதலை 2 திரைப்படம் ரிலீஸாகிவிட்டதால் வெற்றிமாறன் ‘வாடிவாசல்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ‘வாடிவாசல்’ திரைப்படத்தை மூன்று பாகங்களாக உருவாக்கப்பட உள்ளதாகவும் ஏப்ரல் மாதத்தில் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் வெற்றிமாறனிடம் எப்போது வாடிவாசல் தொடங்கும் எனக் கேட்கப்பட்டது. அதற்கு “மே அல்லது ஜூன் மாதத்தில் தொடங்கும். தற்போது முதல் கட்ட பணிகள் நடந்து வருகின்றன” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்