சூர்யாவின் படத்தை கியூபில் வரைந்த கலைஞர்…பாராட்டிய சூர்யா

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (17:26 IST)
நடிகர் சூர்யாவின் உருவப் படத்தை கியூப் சதுரங்கங்களை வைத்து வரைத்த கலைஞரை சூர்யா பாராட்டியுள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் சூரரைப் போற்று. இப்படம் வரும் 12 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசாகிறது. சூர்யா  தனது ரசிகர்களுக்கு எனவே இப்படத்தை பிரைம் ஷோவில் திரையிடவுள்ளார்.

இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்த ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டு டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

இந்நிலையில்,  ராஜேஸ் பாண்டியன் என்ற கலைஞர் கியூப்  சதுரங்கப் பெட்டிகளைக் கொண்டு நடிகர் சூர்யாவின் உருவப்படத்தை வரைந்து அதில், சூரரைப் போற்று என்று எழுதியுள்ளார். அதைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதைப் பார்த்த சூர்யா ஹார்ட் சிம்பல் பதிவிட்டு அவரைப் பாராட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்