சூர்யா-செல்வராகவன் படத்தின் டைட்டில் அறிவிப்பு எப்போது?

Webdunia
செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (23:44 IST)
பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கிய 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆகியும் இன்னும் ஒருசில காரணங்களால் ரிலீஸ் ஆகவில்லை. அதேபோல் சந்தானம் நடிப்பில் செல்வராகவன் இயக்கி வந்த 'மன்னவன் வந்தானடி' படத்தின் படப்பிடிப்பும் பாதியில் நின்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் செல்வராகவன் தற்போது சூர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு என்பதால் இந்த படம் உறுதியாக வெளிவந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த நிலையில் இதுவரை டைட்டில் அறிவிக்கப்படாமல் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் வரும் மார்ச் 5ஆம் தேதி டைட்டில் பர்ஸ்ட்லுக்கை வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளானர். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்