சூர்யாவின் 40 வது படம் … இயக்குநர் டுவீட்…ரசிகர்கள் டிரெண்டிங்

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2020 (21:57 IST)
சமீபத்தில் சூர்யா தயாரித்து நடித்திருந்த சூரரைப் போற்று திரைப்படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார்.

இந்நிலையில் சூர்யாவின் 40வது படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்கு எதாவது புதுஅப்டேட் வருமா என்று ரசிகர்கள் தினமும் கேள்வி எழுப்பி வந்தனர். இதுகுறித்து பல்வேறு வதந்திகள்வெளியானது.

இதுகுறித்து இயக்குநர்  பாண்டிராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், நண்பர்களே நாங்கள் உங்களுடைய ஆர்வத்தை அறிகிறோம். ஆனால் வதந்திகளை நம்ப வேண்டாம். தயாரிப்பு நிறுவனம் யார் நடிக்கவுள்ளனர் என்பது குறித்த விவரங்கள்  அதிகாரப்பூர்வமாக வெளியிடும். நாங்கள் கடின உழைப்பின் மூலம் உங்களுக்கு சிறந்ததைக் கொடுக்க முயல்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்