தமிழ் மக்களின் அன்புக்கு அமைதி வழியில் மேன்மை செய்த விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள்- இயக்குநர் டுவீட்

திங்கள், 19 அக்டோபர் 2020 (17:05 IST)
தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் விஜய் சேதுபதியை ஹீரோவாக அறிமுகம் செய்தவர் இயக்குநர் சீனுராமசாமி.  800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டாம் என்றும் நல்ல முடிவு அறிவிப்பார் என்று கூறி வந்த அவர் தற்போது தமிழ் மக்களின் அன்புக்கு அமைதி வழியில் மேன்மை செய்த விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த வாரம் பெரும் பேசுபொருளாக இருந்தது விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படமான 800 படத்தில் அவர் நடிக்க வேண்டாம் என்பதுதான்.

தமிழ் –இலங்கை தமிழ் இயக்கக்க, தமிழ் நடிகர், நடிகைகள், பாடலாசிரியர்கள் உள்ளிட்ட பலரும் விஜய் சேதுபதிகு எச்சரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, நடிகர் விஜய் சேதுபதி ஒரு இணையற்ற கதை சிறந்த தனித்துவமான கதையான முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நான் நடிப்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று ஒரு இலங்கை மீடியாவுக்கு  விஜய் சேதுபதி பேட்டியளித்த நிலையில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இன்று முத்தையா முரளிதரன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் எனது வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதிக்கு கடுமையான எதிர்ப்புகள் ஏற்பட்டது. என்னால் தமிழ்நாட்டில் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படுவதை நான் விரும்பவில்லை. அவரது கலைவாழ்வில் என்னால்  தடைஏற்பட்டுவிடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு இத்திரைப்படத்திலிருந்து அவரை விலகிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.

இதற்கு விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி வணக்கம் என்று பதிவிட்டுள்ளார். எனவே முத்தையா முரளிதரனின் 800 படத்திலிருந்து விலகுவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து இயக்குநர் சீனுராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தனது ஹீரோ அந்தஸ்தை உயர்த்திக் காட்ட நினைக்காமல் எப்போதும் போல எளிமையாக ’’நன்றி வணக்கம் ‘’ என்று தன்னை நாடி வந்தவருக்கு விடை தந்து தமிழ் மக்களின் அன்புக்கு அமைதி வழியில் மேன்மை செய்த மக்கள்செல்வன் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்