ஸ்டுடியோக்களிலேயே அடைபட்டு கிடந்த தமிழ் சினிமாவை கிராமப் புறங்களுக்கு அழைத்து சென்று தமிழ் ரசிகர்களுக்கு நிஜமான கிராமங்களையும் அதன் ரத்தமும் சதையுமான மக்களையும் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாரதிராஜா. ரஜினி கமல் போன்ற இரு உச்ச நடிகர்கள் கோலோச்சிய காலத்தில் அவர்கள் இல்லாமலேயே காலம்கடந்து நிற்கும் படங்களைக் கொடுத்து இயக்குனர் இமயமாக உயர்ந்து நிற்கிறார். இன்று அவரது 77 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
ஆயிரம் இளைஞர்களின் கனவுகளுக்கு வாசலும் பாதையும் அமைத்துக்கொடுத்த எங்கள் அன்புத்தந்தை, பிதாமகன், சினிமாவோடு தீராக்காதல் செய்யும் கலைஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்... நீங்கள் பிறந்ததால் நாங்கள் வாழ்கிறோம்... @offBharathiraja @onlynikil என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.