சூர்யா பட புதிய அப்டேட் கொடுத்த இயக்குநர்

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (22:56 IST)
சூர்யா தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சூர்யா 40 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார். இவர்களுடன் சத்யராஜ், சரண்யா, தேவதர்ஷினி  உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கவுள்ளனர்.

நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய இப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ், சூர்யா40 படத்தின் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி, இப்படத்தில் 35% ஷூட்டிங் முடித்துள்ளதாகவும்,  அடுத்தகட்ட ஷூட்டிங் ஊரடங்கு முடிந்தபின்னர் தொடங்கும் எனக் கூறியுள்ளார்.

மேலும், இப்படத்தின் தலைப்பு வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்