வெற்றி மாறன் அட்வைஸ்-ஐ கேட்கவில்லை – இயக்குநார் வேதனை !

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (22:51 IST)
தனுஷின் நடிப்பில், பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை,  அசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கியர் வெற்றிமாறன். தற்போது சூரி மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் விடுதலை என்ற  படத்தை இயக்கிவருகிறார். அடுத்து சூர்யா நடிப்பி வாடி வாசல் படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில், துருவங்கள் 16 என்ற படத்தை இயக்கிய கர்த்திக் நரேன் வெற்றிமாறன் கூறிய அறிவுரையைக் கேட்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அதில், நான் எடுத்த நரகாசுரன் படம் ரிலீஸாகாமல் தள்ளிப் போய்கொண்டிருந்தது. அதனால் வேகமாக ஒரு படம் கொடுக்க வேண்டுமென்று  அவசரமாக மாஃபியா என்ற படத்தை எடுத்தேன். இப்படத்தை உருவாக்கும் முன் வெற்றிமாறன். தாமதம ஆனாலும் நல்ல தரமான படத்தை கொடுக்கவேண்டும் என்று கவனமாக இருக்கவேண்டும் எனாக் கூறினார். ஆனால் நான் அதைப் பின்பற்றவில்லை எனக் கூறியுள்ளார்.

மாஃபியா படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவிலை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்