சூர்யாவை போர் வீரனாக மாற்றிய சிறுத்தை? – சூர்யா 42 மாஸ் அப்டேட்!

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (14:36 IST)
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் சிறுத்தை, வீரம், விஸ்வாசம், அண்ணாத்த உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கியவர் ‘சிறுத்தை’ சிவா. தற்போது முதன்முறையாக சிறுத்தை சிவா – சூர்யா கூட்டணியில் படம் அமைகிறது. சூர்யாவின் 42வது படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார்.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான அறிவிப்பு மற்றும் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் ஆரம்பத்தில் ஒரு கழுகு பறக்கிறது. பின்னர் அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டர், பெருமனத்தார் என்ற பெயர்கள் காட்டப்படுகிறது. பின்னர் பெரும் போர்களத்தை தாண்டி சென்று கையில் கோடாரி, வில் அம்புகளுடன் இருக்கும் நபரின் மேல் அமர்கிறது.

இதன்மூலம் வரலாற்று புனைவான கதாப்பாத்திரத்தில் சூர்யா நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் அவரது கதாப்பாத்திரம் ஆக்ரோஷமான ஒன்றாக இருக்கும் என்றும், 3டியில் வெளியாவதால் மேலும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்