சூர்யா நடிக்கும் 44வது திரைப்படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சற்று முன் அந்த டீசர் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் கருணாகரன், நாசர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த படத்தின் டைட்டில் "ரெட்ரோ" என்ற அறிவிக்கப்பட்டு, டீசர் வீடியோவும் வெளியாகியுள்ள நிலையில், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட்" நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் "ஸ்டோன் பெஞ்ச்" நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யாவின் 44 படத்திற்கு ரஜினியின் ஜானி என்ற டைட்டில் வைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் சிலர் வதந்திகள் பரப்பிய நிலையில் அது முழுக்க முழுக்க வதந்தி என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது