தென்காசியில் 'உறியடி 2' ஷூட்டிங்: படத்தின் மோசன் போஸ்டரை வெளியிட்ட சூர்யா

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2018 (17:58 IST)
அறிமுக இயக்குநர் விஜயகுமார் இயக்கி நடித்த 'உறியடி' படம் கடந்த 2016-ம் ஆண்டுவெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில், அவரின் அடுத்த படமும்'உறியடி' படத்தின் இரண்டாம் பாகமான 'உறியடி 2' படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்கிறார்.

அவருடன் இணைத்தயாரிப்பாளராக இப்படத்தின் இயக்குநர் விஜயகுமாரும் இணைந்துள்ளார். இதில் விஜயகுமாருக்கு ஜோடியாக அறிமுக நாயகி விஸ்மயா நடிக்கிறார். சுதாகர், ஷங்கர்தாஸ் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். '96' படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கியுள்ளது. படத்தின் மோசன் போஸ்டரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்