சிம்பு-சுந்தர் சி படம் குறித்து முக்கிய அப்டேட்!

வியாழன், 20 செப்டம்பர் 2018 (16:05 IST)
தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் 2013-ல் வெளியான படம் 'அத்தாரின்டிக்கி தாரேதி'. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கினை சுந்தர்.சி இயக்க சிம்பு ஹீரோவாக  நடிக்கிறார்.
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஜார்ஜியாவில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இதில் சிம்புக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து  வருகிறார்.
 
இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி கமிட்டாகியிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், யுவன்ஷங்கர் ராஜாதான் இந்தப் படத்துக்கு இசை எனத் தற்போது உறுதி செய்திருக்கிறார்கள். படத்தை ஒரே ஷெட்யூலில் முடிக்கவும் திட்டமிட்டு உள்ளார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்