’இந்தியன் 2’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி.. ஷங்கர் அறிவிப்பு.. சிங்கிள் பாடல் எப்போது?

Mahendran

திங்கள், 20 மே 2024 (10:08 IST)
’இந்தியன் 2’  திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என்று ஏற்கனவே செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது ஷங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 
 
’இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் என்று ஷங்கர் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளதோடு இந்த படத்தின் சிங்கிள் பாடல் மே 22ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார். அனிருத் கம்போஸ் செய்த இந்த பாடல் பட்டையை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
மேலும் ’இந்தியன் 2’ படத்துடன் ’இந்தியன் 3’ திரைப்படத்தின் டிரைலரையும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் இரண்டு ட்ரெய்லர்களும் எடிட் செய்யப்பட்டு தயாராக இருப்பதாகவும் ’இந்தியன் 2’ படம் பார்ப்பவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ’இந்தியன் 3’ படத்தின் டிரைலர் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

Edited by Mahendran
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்