மீண்டும் இணையும் ஜெய்பீம் கூட்டணி… இயக்குனர் ஞானவேல் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2022 (09:50 IST)
இயக்குனர் ஞானவேல் ஜெய்பீம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பரவலான கவனத்தைப் பெற்றார்.

சூர்யா நடித்த ஜெய் பீம் என்ற திரைப்படத்தை இயக்கிய ஞானவேல், தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களின் பட்டியலில் இடம்பிடித்தார். நேற்றோடு அந்த படம் ரிலீஸாகி ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து அவர்  ஹிந்தியில்’தோசா கிங்’ என்ற படத்தை இயக்க உள்ள்தாக தகவல்கள் வெளியாகின. இந்த படம் சரவண பவன் ஜீவஜோதி வழக்கை பற்றிய கதை என்று சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது இயக்குனர் ஞானவேல் கொடுத்துள்ள பேட்டியில் அடுத்து சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும், அந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார். சூர்யா அடுத்தடுத்து சூர்யா 42, வணங்கான் மற்றும் வாடிவாசல் என லைன் அப் வைத்திருக்கும் நிலையில் புதிதாக இந்த படமும் இணைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்