சினிமா தயாரிப்பாளரும், பைனான்சியரான அன்பு செழியன் தனது கோபுரம் பிலிம்ஸ் மூலமாக சினிமா படங்கள் பல தயாரித்துள்ளார். பல படங்களுக்கு பைனான்ஸ் செய்துள்ளார். இந்நிலையில் இன்று இவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.