ஒய்.ஜி, மகேந்திரனுக்கு வாழ்த்துகள் கூறிய சூப்பர் ஸ்டார் ரஜினி

Webdunia
சனி, 26 நவம்பர் 2022 (16:18 IST)
தமிழ்  சினிமாவின் குணச்சித்திர நடிகர் ஒய்.ஜி மகேந்திரனுக்கு சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அண்ணாமலை ஆகியோர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

 தமிழ்  நாடகத்துறையில் முக்கிய பங்காற்றியுள்ளவர் ஒய்.ஜி மகேந்திரன். இவர், சுமார் 5000 க்கும் மேற்பட்ட மேடை நாடகங்கள்ல் தோன்றி பல வேடங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.

இவர் நாடகத்தில் மட்டுமின்றி, கே.பாலச்சந்திரன் நவக்கிரகம் படத்தில் அறிமுகமாகி, பரீட்சைக்கு நேரமாச்சு,  நூற்றுகு நூறு, மீண்டும் ஒரு காதல் கதை, ஸ்ரீ ராகவேந்தர்,. இளைஞன், தெய்வ திருமகள், ராமராஜன், மேகா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

 இந்த நிலையில், இவர் நாடகத்துறையில் சிறந்த பங்காற்றியதற்காக, இவருக்கு சங்கீத நாடக அகாடமி விருது வழங்கியுள்ளது. அவருக்கு சினிமாத்துறையினர் மற்றும் அரசியல்தலைவர்கள் வாழ்த்துகள் கூறி வருகினறனர்.

நடிகர் ரஜினிகாந்த் தன் டுவிட்டர் பக்கத்தில்,    நாடகத்துறையில் சிறந்த பங்காற்றியதற்காக 2021 ஆம் ஆண்டிற்காக சங்கீத நாடக அகாடமி தேசிய விருது பெற்றுள்ள ஒய்.ஜி மகேந்திரனுக்கு வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை தன் டிவிட்டர் பக்கத்தில், கடந்த 61 ஆண்டுகளாக 5,000க்கும் மேற்பட்ட நாடகங்களில் தோன்றி பல வேடங்களில் நம்மை சிந்திக்க மற்றும் மகிழ்வித்த திரு Y.G. மகேந்திரன் அவர்களுக்கு சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டிருக்கும் செய்தியை அறிந்து மகிழ்ந்தேன்.

அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்,

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்