நிவாரணத்திற்கு வழங்கிய அரிசித்தொகை ரூ.205 கோடியை கேட்ட மத்திய அரசு!

சனி, 26 நவம்பர் 2022 (15:48 IST)
கடந்த 2018-2019 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில்  நமது அண்டை மாநிலமான கேரளா மழைவெள்ளடத்தின்போதும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

எனவே, முதல்வர், பினராயி விஜயன் தலைமையிலான அரசு,பிரதமர் மோடி தலைமையிலான மத்திய  அரசிடம் உதவி கேட்டிருந்தது.

இதையடுத்து,  மத்திய பேரிடர் மேலாண்மை துறை, 89 டன் அரிசியை அனுப்பி அவைத்தது.

இந்த நிலையில், கேரள அரசு மத்திய அரசுக்கு எதிரான தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில், இன்று, மத்திய அரசு, கேரள அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது.

ALSO READ: கேரளா மோசமான நிலையை நோக்கி செல்கிறது: முதல்வர் பினராயி விஜயன்
 
அதில், கடந்த 2018-2019 ஆம் ஆண்டு வெள்ளத்தின்போது வழங்கப்பட்ட 89 டன் அரசிக்கான தொகை ரூ.205.81 கோடியை தரவேண்டுமென கூறியுள்ளது.

அத்தொகையை தராவிட்டால், இந்த ஆண்டிற்காக  மாநில பேரிடர் மேலாண்மை துறையின் ஒதுக்கீட்டில் ஈடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

எனவே இத்தொகையை வழங்க முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்