ரஜினியின் பாட்ஷா படத்துக்கு இப்படி ஒரு சாதனை இருக்கா?- டி ஆர் பி யில் உச்சம்!

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (08:52 IST)
தமிழ் வனிகா சினிமாவின் மைல்கல் படம் என்றால் அது ரஜினி நடித்த பாட்ஷா என்று சொல்வதில் மிகையில்லை. பாட்ஷாவுக்குப் பிறகு அதுபோல பல படங்கள் வெளியாகின. இந்தப்படம் அமிதாப் நடித்த இந்திப் படத்தின் தழுவல் ஆகும். இந்தப் படத்தை ஒரிஜினலை விட சிறப்பாக இயக்கி ரஜினியின் சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு சென்றவர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. இந்த படம் வெளியாகி 28 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழ்நாட்டில் ரஜினிக்கு அரசியல் இமேஜை உருவாக்கியதில் இந்த படம் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது. இந்த படத்தின் பாதிப்பில் அதன் பிறகு நூற்றுக்கணக்கான கமர்ஷியல் படங்கள் பல மொழிகளில் உருவாகின.

திரையரங்குகளில் வசூல் சாதனைப் படைத்த இந்த திரைப்படம் தொலைக்காட்சியிலும் இதுவரை எந்த படத்தாலும் முறியடிக்க முடியாத சாதனையைப் படைத்துள்ளது. அது என்னவென்றால் டி ஆர் பி யில் 11.79 ரேட்டிங் பெற்று முதல் இடத்தில் உள்ளது. இந்த படத்தின் பார்வையாளர் எண்ணிக்கை 9.48 மில்லியன் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்