மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் படம் ரிலீஸாகும் தேதியில் தனது திருமணம் என்பதால் திருமணத்தேதியைத் தள்ளிவைத்துள்ளார் ஒரு ரசிகர்.
சூப்பர் ஸ்டார் மம்முட்டி தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர்.மலையாளத்தில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர் வட்டாரத்தைக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் அவரது நடிப்பில் வெளியாகியுள்ள ’மாமாங்கம்’ என்ற படம் இம்மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அந்த நாளில் மம்முட்டியின் தீவிர ரசிகரான மேமன் சுரேஷ் என்பவரி திருமணத் தேதி நிச்சயிக்கப்பட்டதால், சுரேஷ் திருமணத்தை வரும் 30 ஆம் தேதிக்கு தள்ளிப்போட்டுள்ளார்.
சுரேஷுக்கு நடிகர் மம்முட்டியின் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர்.