மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா!

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (11:27 IST)
இயக்குனர் சுந்தர் சி அரண்மனை 3 படத்துக்குப் பிறகு ஜீவாவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார்.

இயக்குனர் சுந்தர் சி இயக்கிய அரண்மனை 3 படத்தின் வெற்றி அவரின் அடுத்த படத்தை உடனடியாக தொடங்க வைத்துள்ளது. அடுத்த படத்தில் அவர் நடிகர் ஜீவாவை கதாநாயகனாக்கியுள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே கலகலப்பு 2 படத்தில் இணைந்து பணிபுரிந்துள்ளனர்.

இந்த படத்தில் கதாநாயகியாக ராஷிகண்ணா ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் பற்றிய விவரம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்