சைலண்ட் ஆக சம்பளத்தை உயர்த்திய சமந்தா!

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (10:58 IST)
நடிகை சமந்தா இப்போது தன் சம்பளத்தை 4 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் கடந்த 2017ல் திருமணமான நிலையில் சமீபத்தில் அவர்கள் தங்கள் விவாகரத்தை அறிவித்துள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்துக்கு பலரும் பல காரணங்களை பேசி வந்த நிலையில், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என சமந்த  தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இப்போது சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் தங்கள் தொழிலில் முழு மூச்சாக இறங்கியுள்ளனர்.

விவாகரத்துக்கு முன் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வந்த சமந்தா இப்போது இந்தி படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் பேமிலி மேன் தொடர் மூலம் இந்தியா முழுவதும் அவருக்குக் கவனம் கிடைத்த நிலையில் சம்பளத்தையும் 4 கோடியாக உயர்த்தி விட்டாராம். தென்னிந்தியாவில் நயன்தாராவுக்குப் பிறகு அதிக சம்பளம் பெறும் நடிகையாக உருவாகியுள்ளார் சமந்தா.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்