சுல்தான் பட அடுத்த சிங்கில் ரிலீஸ்

Webdunia
புதன், 31 மார்ச் 2021 (18:10 IST)
நடிகர் கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தின் அடுத்த சிங்கில் தற்போது ரிலீசாகியுள்ளது.

கார்த்தி ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தில் நெப்போலியன், லால், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். விவேக்-மெர்வின் இசையமைத்துள்ள இந்த படம் கார்த்தியின் மேலும் ஒரு வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் ட்ரெய்லருக்கு பின்னர் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கார்த்தி நடித்த ’சுல்தான்’ திரைப்படம் ஏப்ரல் 2 ஆம் தேதியிலிருந்து  தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் இந்த படம் ரிசர்வேஷன் நேற்று  முதல் 7 மணி முதல் தொடங்கியதால்  ஏராளமானோர் இந்த படத்திற்கு ரிசர்வேஷன் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் சுல்தான் படத்தில் இடம்பெற்றுள்ள  Pudhu saththam என்ற பாடலை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது. இப்பாடல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் மாஸ்டர் படத்திற்கு பிறகு ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைப்பதுபோல் எந்தப் படமும் அமையவில்லை என விமர்சனம் எழும்நிலையில் கார்த்தியின் சுல்தான் நிச்சயம் வசூல் சாதனை படைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்