’’நல்லவேளை நான் அந்தப் படத்தில நடிக்கில’’ –தனுஷ் கூறியதாக மாரி செல்வராஜ் தகவல்

புதன், 31 மார்ச் 2021 (15:46 IST)
இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். இப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில்,இப்படத்தின் பிரஸ் மீட்டிங்கில் சில விஷயங்களை மாரி செல்வராஜ் பகிர்ந்துகொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:

கர்ணன் படம் எப்படி வெளியாகும் எப்போது வெளியாகும்…தியேட்டரில் வெளியாகுமா??ஒடிடியில் வெளியாகுமா என எல்லா இயக்குநர்களைப் போலவே நானும் நினைத்தேன். நான் கர்ணனைக் கண்டாள் முதல் இதையே நினைத்துக்கொண்டிருந்தேன். இரண்டாம் படம் என்பதால் உணர்ச்சிவசப்படாமல் பேச நினைத்தேன். ஆனால் முடியவில்லை. இப்படத்தை தியேட்டரில் வெளியிட உறுதியளித்த தயாரிப்பாளர் எஸ்.தாணுவுக்கு நன்றி. ஒருநாள் தனுஷிடன் இருந்து எனக்கு கால் வந்தது.பரியேறும் பெறுமாள் உங்களுக்காக செய்தேன்..என்று அவரிடம் கூறினேன். அதற்கு அவர் நல்லவேளை நீங்கள் என்னைப் பார்க்கவில்லை. நீங்கள் எப்படி நினைத்தீர்களோ அப்படி அந்தப்படம் வந்திருக்கிறது. என்றார்.
பின்னர், அரைமணிநேரம் தனுஷிடம் கதை சொன்னபிறகு அவருக்குப் பிடித்துபோனது,தாணு சாருக்கும் பிடித்துபோனது. உடனே கர்ணன் படத்தை ஆரம்பிக்குமாறு கூறினார் எனத் தெரிவித்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்