'பிச்சைக்காரன் 2’ படத்தின் சூப்பர் அப்டேட்: விஜய் ஆண்டனி டுவிட்!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (17:58 IST)
விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் என்ற திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட்டை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்
 
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமையை ஸ்டார் டிவி நெட்வொர்க் வாங்கியுள்ளதாக விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
மேலும் இந்த படத்தை அவரே இயக்கி இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மேலும் சில அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்