என்றாவது ஒருநாள் தேசிய விருதை வாங்குவேன்… அம்மா கொடுத்த புடவையோடு வருவேன் – சாய் பல்லவி நம்பிக்கை!

vinoth

செவ்வாய், 18 பிப்ரவரி 2025 (09:57 IST)
உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்த சாய் பல்லவி, 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றி அவரை தென்னிந்திய சினிமா முழுவதும் பிரபலமானார். அதையடுத்து தமிழில் தியா, என் ஜி கே, கார்கி மற்றும் மாரி 2 உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார்.  முன்னணி நடிகையாக இருந்தாலும் அவர் நல்ல கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் மட்டுமே நடித்தார்.

இந்நிலையில் அவர் கடந்த காலங்களில் அஜித்தின் வலிமை மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய பட்ங்களில் நடிக்க மறுத்ததாக தகவல் ஒன்று பரவி வருகிறது. இந்த படங்களின் கதை அவருக்கு சென்ற போது, அதில் தன்னுடைய கதாபாத்திரத்துக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்று சொல்லி அவர் நிராகரித்து விட்டார் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகின. அதே போல கிளாமர் வேடங்களில் நடிக்க மறுத்ததாலும் அவருக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டில் அவர் நடித்த ‘அமரன்’ திரைப்படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சம்மந்தமாகப் பேசியுள்ள அவர் “எனக்கு 21  வயது இருக்கும்போது என் அம்மா ஒரு புடவை எடுத்துக் கொடுத்து, இதை உன் கல்யாணத்தன்று கட்டிக்கொள்ளவேண்டும் என்று சொன்னார். நான் அப்பொது சினிமாவுக்குள் வரவில்லை. அதன் பின்னர் பிரேமம் பட வாய்ப்பு வந்தது. எப்போதாவது நம் நாட்டின் உயரிய விருதான தேசிய விருதை வாங்குவேன் என்ற நம்பிக்கை உள்ளது. அப்போது அந்த புடவையைக் கட்டிக்கொண்டுதான் அந்த விருதை வாங்குவேன்” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்