“மகபாரதம் 10 பாகங்களாக உருவாகும்…” இயக்குனர் ராஜமௌலி கொடுத்த அப்டேட்!

Webdunia
வெள்ளி, 12 மே 2023 (08:26 IST)
இயக்குனர் ராஜமௌலி இதுவரை தொட்டதெல்லாம் ஹிட்தான். அதுபோல தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் எல்லோருக்கும் அவர் ஹிட் கொடுத்துவிட்டார். இன்னும் மகேஷ் பாபுவோடு மட்டும் இணையவில்லை. இந்நிலையில் ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு இருவரும் இணைய இருக்கின்றனர். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமையும் என சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் பெரும்பாலான காட்சிகள் காடுகளில் படமாக்கப்பட உள்ளதாகவும், ஏராளமான விலங்குகள் பயன்படுத்தப் பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் இந்தியாவில் விலங்குகளை ஷூட்டிங்கில் பயன்படுத்த ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளதால் வெளிநாட்டில் சென்று பெரும்பாலானக் காட்சிகளை படமாக்க உள்ளாராம் ராஜமௌலி. இந்நிலையில் இப்போது இந்த படம் பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் மூன்று பாகங்களாக உருவாக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் ராஜமௌலி தன்னுடைய கனவுப்படமான மகாபாரதத்தை உருவாக்குவது சம்மந்தமாக பேசியுள்ளார். அதில் “நான் மகாபாரதத்தை உருவாக்கினால், அதை 10 பாகங்களாக உருவாக்குவேன் என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்லமுடியும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்