முதலமைச்சருடன் நிதியமைச்சர் பிடிஆர் சந்திப்பு.. ஆடியோ விவகாரம் குறித்து ஆலோசனையா?
திங்கள், 1 மே 2023 (11:08 IST)
தமிழக முதலமைச்சரை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் சந்தித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதலமைச்சரின் குடும்பத்தினர் முப்பதாயிரம் கோடி ரூபாய் பணம் சேர்த்ததாக பிடிஆர் ஆடியோ என்று வெளியானதாக கூறப்பட்ட ஒரு ஆடியோ வெளியாகி வைரல் ஆனது.
இதனை அடுத்து இரண்டாவது ஆடியோ ஒன்றும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஆடியோக்களுக்கு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் ஏற்கனவே மறுப்பு தெரிவித்து இருந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது ஆடியோ விவகாரம் குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்படும் நிலையில் நிதி அமைச்சர் முதல்வரை சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.