பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தற்கொலை… ராஜமௌலி மேல் குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டதால் பகீர்!

vinoth
ஞாயிறு, 2 மார்ச் 2025 (09:29 IST)
தெலுங்கு சினிமாவில் முன்னணி கமர்ஷியல் இயக்குனராக வலம் வந்த ராஜமௌலி மகதீரா, ஈகா, பாகுபலி மற்றும் ஆர் ஆர் ஆர் ஆகிய படங்களின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்படும் இயக்குனர் ஆனார். தற்போது அவர் மகேஷ் பாபுவை வைத்து இயக்கும் படத்தை ஹாலிவுட்டின் வால்ட் டிஸ்னி தயாரிக்கிறது. ஜேம்ஸ் கேமரூன் வழங்குகிறார்.

இந்நிலையில் ராஜமௌலியின் நண்பராகவும் தெலுங்கு சினிமாவில் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் இருந்த சீனிவாச ராவ் என்பவர் நேற்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரின் இந்த முடிவு தெலுங்கு சினிமாவில் பீதியைக் கிளப்பியுள்ளது.

மேலும் இறப்பதற்கு முன்னர் அவர் எடுத்து நண்பர்களுக்குப் பகிர்ந்த வீடியோவில் “ராஜமௌலி என்னை மிகவும் சித்ரவதை செய்தார். அவரின் நடவடிக்கைகள்தான் என்னைத் தற்கொலைக்குத் தூண்டின” எனக் கூறியுள்ளதால் தெலுங்கு திரையுலகமே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இந்த வீடியோ வைரலானதால் அவர் மேல் வழக்குப் பதிய வேண்டும் என்றும் கருத்துகள் சமூகவலைதளங்களில் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்