ஸ்ரீகணேஷ் இயக்கும் சித்தார்த் 40 படத்தில் இணைந்த சரத்குமார் & தேவயானி…!

vinoth
திங்கள், 15 ஜூலை 2024 (07:31 IST)
8 தோட்டாக்கள் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ஸ்ரீகணேஷ், அந்த படத்துக்குப் பிறகு 5 ஆண்டுகள் கழித்து இயக்கிய திரைப்படம் குருதி ஆட்டம். இந்த படத்தில் அதர்வா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்த வெற்றியை இந்த திரைப்படம் பெறவில்லை.

இதனால் அவரின் அடுத்த படத்தைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து மாவீரன் படத்தைத் தயாரித்த அவர் சாந்தி டாக்கீஸ் தயாரிக்கும் சித்தார்த்தின் 40 ஆவது படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத் மற்றும் சைத்ரா அச்சார் ஆகியோர் இணைந்துள்ளனர். இந்த படத்தின் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்