ஸ்பைடர் – முன்னோட்டம்

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (18:19 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் நாளை ரிலீஸாகவிருக்கும் படம் ‘ஸ்பைடர்’.
 


 

மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகவுள்ள முதல் தமிழ்ப் படம் ‘ஸ்பைடர்’. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கிலும் இந்தப் படம் தயாராகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாக நடித்துள்ளார். முதலில் இந்த கேரக்டருக்காக பேசப்பட்டவர் பரினீதி சோப்ரா. அவருடைய தேதிகள் சரிப்பட்டு வராததால், ரகுல் ஒப்பந்தமானார்.

ரகசிய உளவாளியாக மகேஷ் பாபு நடித்திருக்கும் இந்தப் படத்தில், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பரத் இருவரும் வில்லன்களாக நடித்துள்ளனர். ஆர்.ஜே.பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்களை, மதன் கார்க்கி எழுதியுள்ளார். ‘பயோ பயங்கரவாதம்’ பற்றிய கதையாக இது இருக்கலாம் என்கிறார்கள். இந்தப் படத்தை, தமிழ்நாட்டில் லைகா நிறுவனம் வெளியிடுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்