பல ஆண்டுகளுக்குப் பிறகு சசிகுமாருக்கு சூப்பர் ஹிட்.. தமிழகத்தில் மட்டும் இவ்வளவு கலெக்‌ஷன் வருமா?

vinoth

வெள்ளி, 9 மே 2025 (14:37 IST)
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘குட்னைட்’ மற்றுன் ‘லவ்வர்’ ஆகிய படங்களுக்கு அடுத்தப் படமாக கடந்த வாரம் ரிலீஸானது சசிகுமாரின் ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம். சிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோர் நடித்துள்ள ‘டூரிஸ்ட் பேமிலி’ படமும் ஒன்று. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ரிலீஸுக்கு முன்பே இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு உருவாகி இருந்தது.

இதனால் படம் ரிலீஸான பின்னர் நாளுக்கு நாள் வசூலின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முதல் நாளில் 2 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்த நிலையில் அதன் பிறகு அடுத்தடுத்த நாட்களில் 2 கோடி ரூபாய்க்குக் குறையாமல் வசூலித்து வருகிறது. தற்போது 6 நாட்களில் 15 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. ரிலீஸானதில் இருந்து தொடர்ச்சியாக 2.5 கோடி ரூபாய்க்கு மேல் நிலையான வசூலைப் பெற்று வருகிறது இந்த படம்.

இதன் மூலம் தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் 25 கோடி ரூபாய் அளவுக்கு வசூலிக்கும் என சொல்லப்படுகிறது. இதன் மூலம் சசிகுமாருக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்