உடம்பை காட்ற மாதிரி டிரஸ் பண்ணா அப்படி தான் பேசுவேன்; எஸ்பிபி அதிரடி

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (11:47 IST)
நடிகைகள் உடை குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்த எஸ்.பி.பி தான் பேசியதில் எந்த தவறும் இல்லை என அதிரடியாக கூறியிருக்கிறார்.
 
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்பு பெற நடிகைகள் அரைகுறை ஆடை அணிவது மிகுந்த வேதனையை கொடுக்கிறது.  வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக நடிகைகள் இப்படி கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுகின்றனர். நம் கலாச்சாரம் அந்த அளவிற்கு கீழ் இறங்கிவிட்டது என கடுமையாக விமர்சித்தார். இதற்கு கடும் சர்ச்சைகளை கிளப்பி அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென எதிர்ப்புகள் எழுந்தன.
 
இந்நிலையில் எஸ்.பி.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் எதிர்ப்பு வந்தாலும் நான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன் என கூறியுள்ளார். எஸ்.பி.பியின் கருத்துக்களை சிலர் எதிர்த்தாலும், அவர் கூறியதில் எந்த தவறும் இல்லை என அவருக்கு பலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்