சிவகார்த்திகேயனின் ‘டான்’ படப்பிடிப்பில் இணைந்த சூரி: வைரல் புகைப்படம்!

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (13:12 IST)
சிவகார்த்திகேயனின் ‘டான்’ படப்பிடிப்பில் இணைந்த சூரி
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் முக்கிய பிரபலங்கள் இணைந்து வருகின்றனர் 
 
ஏற்கனவே எஸ்ஜே சூர்யா இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்ததை அடுத்து அவரை படக்குழுவினர் வாழ்த்தி வரவேற்றனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று முதல் ‘டான்’ படப்பிடிப்பில் நடிகர் சூரி இணைந்துள்ளார். அவரை படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியின் பூங்கொத்து கொடுத்து வரவேற்று உள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது 
 
சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கும் இந்த படத்தில் கலையரசன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி, சூரி, உள்பட பலர் நடிக்க உள்ளனர். லைக்கா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்