சூர்யா இல்லாமல் தொடங்கும் பாண்டிராஜ் படத்தின் படப்பிடிப்பு!

செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (16:59 IST)
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் பூஜையோடு தொடங்கியுள்ளது.

சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளது உறுதியாகிவிட்டது.. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாம். படத்துக்கான மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க முக்கியமானக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் முதல் முறையாக சரத்குமார் இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க உள்ளாராம். அதுமட்டுமில்லாமல் நீண்ட நாட்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் நடிகர் வடிவேலு இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு தொடங்கியது.

கொரோனா காரணமாக ஓய்வில் இருக்கும் சூர்யா பூஜையில் கலந்துகொள்ளவில்லை. இப்போது சூர்யா இல்லாத காட்சிகளை இயக்குனர் பாண்டிராஜ் படமாக்க உள்ளாராம். பின்னர் புதுக்கோட்டையில் நடக்கும் படப்பிடிப்பில்தான் சூர்யா கலந்துகொள்ள உள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்