நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது இந்த படத்தின் டீசர் குறித்த தகவலை இந்த படத்தின் பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
’சூரரைப்போற்று’ படத்தின் டீசர் தயாராகிவிட்டதாகவும் இந்த டீசருக்கான பின்னணி இசையின் தீம் மியூசிக் ஒன்றை கம்போஸ் செய்து இருப்பதாகவும், ’மாறா மாறா’ என்ற இந்தத் தீம் மியூசிக் சூர்யாவின் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று தான் நம்புவதாகவும், இந்த படத்தின் டீசரை மிக விரைவில் எதிர்பாருங்கள் என்றும் அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த தகவலால் சூர்யாவின் ’சூரரைப்போற்று’ திரைப்படத்தில் ஹேஷ்டேக் மீண்டும் அகில இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
சூர்யா ஜோடியா அபர்ணா பாலமுரளி நடித்துள்ள இந்த படத்தில் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்
A special theme is being composed for the teaser of #SooraraiPottru ... it wil be called as #Maara ... #maara will rise soon ...