’சூரரை போற்று’ நாயகிக்கு குவியும் வாய்ப்புகள்: ஒரு கோடியாக உயர்ந்த சம்பளம்

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (20:09 IST)
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிய சூரரைப்போற்று திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதும் தெரிந்ததே 
 
பொதுவாக ஒரு திரைப்படத்தில் நாயகன் மிகச்சிறப்பாக நடிப்பது வழக்கம் தான். ஆனால் இந்த படத்தில் நாயகியின் கேரக்டரும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி அந்த கேரக்டர்களில் ஒன்றி அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இதனால் சூர்யாவுக்கு இணையாக அபர்ணாவுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது இந்த நிலையில் சூரரைப்போற்று திரைப்படத்தின் ரிலீஸூக்கு பின்னர் அபர்ணாவுக்கு பல படங்கள் வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும் இதனை அடுத்து ஒரு சில லட்சங்களில் மட்டுமே சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அவர் திடீரென தனது சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்தி விட்டதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்