லூசிபர் படத்தை தள்ளிவைத்த சிரஞ்சீவி… நாயகியாகும் சோனாக்‌ஷி சின்ஹா!

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (13:11 IST)
சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க சோனாக்‌ஷ் சின்ஹாவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.

சிரஞ்சீவி நடிப்பில் அடுத்ததாக ஆச்சார்யா படம் ரிலீஸாக உள்ளது. அதன் பின்னர் அவர் லூசிபர் ரீமேக் மற்றும் வேதாளம் ரீமேக் ஆகிய படங்களில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இப்போது புதிதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்காக இயக்குனர் பாபி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இப்போதுள்ள சூழ்நிலையில் லூசிபர் படத்தை உடனே ஆரம்பிக்க முடியாத சூழலில் இந்த படத்தை தொடங்கி விரைவாக முடிக்க உள்ளாராம். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க சோனாக்‌ஷி சின்ஹாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்