தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் இரவு காட்சி ரத்து என தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் தமிழகத்தின் ஒரு சில திரையரங்குகளில் மட்டும் 4 காட்சிகள் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணிக்குள் காட்சிகள் முடிய வேண்டும் என்பதால் காலை காட்சியை சீக்கிரமே ஆரம்பித்து இரவு 9 மணிக்குள் முடியும் வகையில் நான்கு காட்சிகளை திரையிடுவதாக ஒரு சில திரையரங்குகள் அறிவித்துள்ளது
அதன்படி காட்சிகளுக்கு காலை 9 45, மதியம் 12 30, மதியம் 03:30 மற்றும் மாலை 06:30 என காட்சி நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் சென்னையில் இது போன்று நான்கு காட்சிகள் எந்த திரையரங்கில் திரையிடப்பட்டவில்லை என்பதும் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் சில திரையரங்குகளில் நான்கு காட்சிகளை திரையிடப்பட்டுள்ள வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
இருப்பினும் புதிய திரைப்படங்கள் எதுவும் திரையிடப்படாதால் ஏற்கனவே வெளிவந்த சுல்தான், கர்ணன் போன்ற திரைப்படங்கள் மட்டுமே தற்போது வேறு வழியில்லாமல் திரையிடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது