தனுஷின் படங்களிலேயே வசூல் குவித்த படம் இதுதான் !

செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (23:28 IST)
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் ‘கர்ணன். இத்திரைப்படத்தை எஸ் .தாணு தயாரித்துள்ளார்.

சமீபத்தில் 50% பார்வையாளர்களுடன்  வெளியான நிலையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்கள் முதற்கொண்டு ரசிகர்கள் வரை பலரும் இப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

தனுஷ் படங்களிலேயே முதல் நாள் வசூலில் கர்ணன் திரைப்படம் புதிய சாதனை படைத்திருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் முதல் நாளன்று சுமார் ரூ.10 கோடி வசூலித்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் தனுஷ் படங்களில் அதிக வசூல் குவித்ததாகக் கூறப்பட்டது. இந்தச் சாதனையை  கர்ணன் முறியடித்துள்ளது.

கர்ணன் படத்திற்கு ஆதரவு அளித்து வெற்றி அடையச் செய்த ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் ஒரு ட்விட் பதிவிட்டு நன்றி தெரிவித்தார்.

அதில், காட்டுப்பேச்சியுடன் நடிகர் தனுஷ் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து நன்றி எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்