சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’: சிங்கிள் பாடலை எழுதிய சிவகார்த்திகேயன்!

Webdunia
வெள்ளி, 14 ஜனவரி 2022 (11:06 IST)
சூர்யா நடித்து முடித்துள்ள எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. 
 
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி உள்ளார் என்பதும் டி இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘சும்மா சுர்ருன்னு வருது’  என்ற பாடல் வரும் ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
சிவகார்த்தியன் எழுதியுள்ள இந்த பாடலை அமரன் மாலிக் மற்றும் நிகிதா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர் என்பது இந்த பாடல் ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்கள் போல் ஹிட்டாகும் என்றும் கூறப்படுகிறது
 
சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்