மார்க் ஆண்டனி படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு!

வியாழன், 13 ஜனவரி 2022 (15:31 IST)
விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிக்கும் படத்துக்கு மார்க் ஆண்டனி எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

விஷால் சர்ச்சை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை விஷாலின் எனிமி படத்தை தயாரித்த மினி ஸ்டுடியோஸ் வினோத்குமாரே தயாரிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யாவை அனுகியுள்ளனர். மாநாடு படத்தின் அமோக வெற்றியால் எஸ் ஜே சூர்யா தன்னுடைய சம்பளத்தை 6 கோடியாக உயர்த்தி அவர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளாராம். அதனால் அவ்வளவு சம்பளம் கொடுத்து அவரை நடிக்க வைக்க வேண்டுமா என படக்குழு குழப்பத்தில் இருந்தது.

இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் விஷால் படத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பதை உறுதி செய்தனர். அதையடுத்து புத்தாண்டு அன்று படத்தின் தலைப்பு மார்க் ஆண்டனி என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து படத்தின் இசையமைப்பாளராக ஜி வி பிரகாஷ் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்