சிவகார்த்திகேயன் இப்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பின் போது இயக்குனர் மடோன் அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து மோதல் ஆரம்பம் முதலே உருவாகி வந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சமீபத்தில் மோதல் உச்சத்தை எட்டி படப்பிடிப்பே நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் இரு தரப்பும் சமாதானமாகி படப்பிடிப்பை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போது படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கார்ட்டூன் கலைஞராக நடிக்கிறாராம். அவர் கற்பனையாக வரையும் கார்ட்டூன்கள் நிஜத்தில் நடப்பது போல கதை உருவாக்கப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது.
இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் புத்தாண்டை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.