”டான் கம்மி பட்ஜெட்தான்… 100 கோடியும் எனக்கு இல்ல”… சிவகார்த்திகேயன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (09:12 IST)
சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்‌ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து ஒரு தயாரித்த டான் திரைப்படம் கடந்த மே 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. 100 கோடி ரூபாயை திரையரங்குகள் மூலமாக மட்டும் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது. இதையடுத்து படத்தின் 25 ஆவது நாள் வெற்றி விழா நேற்று சென்னையில் நடந்தது.

விழாவில் கலந்துகொண்டு பேசிய சிவகார்த்திகேயன் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அதில் “டான் படத்தை முதலில் தயாரிக்க லைகா நிறுவனத்தினர் தயங்கினார்கள். பெரிய இயக்குனர் யாரிடமாவது செல்லலாம் என்றார்கள். ஆனால் எனக்கு டான் படத்தின் எனர்ஜி பிடித்தது. பண்ணலாம் என்றதும் என்னையே இணைந்து தயாரிக்க சொன்னார்கள்.  புது இயக்குனர் என்பதால் குறைவான பட்ஜெட்டே கொடுத்தார்கள். 100 கோடி வசூல்னு பல பேர் ட்ரீட் கேக்குறாங்க. 100 கோடியும் எனக்கே வர்ல” என கலகலப்பாக பேசியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்