தமிழிலும் மலையாளத்தில் சில படங்களில் மட்டுமே நடித்த நடிகை நஸ்ரியா அனைவராலும் விரும்பப்படும் கதாநாயகியாக இருந்தார். இதையடுத்து அவர் 2014 ஆம் ஆண்டு பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவர் திரையுலக வாழ்வில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து பஹத் பாசிலோடு ட்ரான்ஸ் படத்தில் மீண்டும் இணைந்து நடித்தார். இப்போது நானியுடன் அவர் நடித்துள்ள அடடே சுந்தரா படம் ரிலீஸூக்கு காத்திருக்கிறது.