100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய ‘டான்’… அதிகாரப்பூர்வமாக அறிவித்த லைகா!

Webdunia
புதன், 25 மே 2022 (12:07 IST)
சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

டான்  திரைப்படம் கடந்த மே 13 ஆம் தேதி  வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அனாலும் வசூல் சோடை போகாமல்  முதல் நாளில் 13 கோடியும் இரண்டாவது நாளில் 11 கோடியும் மூன்றாவது நாளில் 9 கோடி வசூலாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயன் படங்களில் அதிக வசூல் கொடுத்த படமாக அமையும் என்று சொல்லப்படுகிறது.

வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில் இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் டான் வசூல் பற்றி படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 12 நாளில் டான் திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்