டான் படத்தின் சக்ஸஸ் பார்ட்டி… கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் & SJ சூர்யா!

புதன், 18 மே 2022 (14:47 IST)
டான் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

டான்  திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி முதல் நாளில் 13 கோடியும் இரண்டாவது நாளில் 11 கோடியும் மூன்றாவது நாளில் 9 கோடி வசூலாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இன்னும் பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் டாக்டர் படம் போலவே வெற்றிபடமாக அமையும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இந்த சக்ஸஸ் மீட்டில் சிவகார்த்திகேயன் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் படக்குழுவினரோடு கலந்துகொண்டுள்ளனர். இது சம்மந்தமான புகைப்படங்களை லைகா நிறுவனம் பகிர, அது இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்