டாக்டர் பட ரிலீஸுக்கு குறுக்கே நிற்கும் சிவகார்த்திகேயன்! ஏன் தெரியுமா?

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (17:16 IST)
டாக்டர் படத்தின் ஓடிடி ரிலிஸுக்கு அந்த படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் எதிர்ப்பு தெரிவிப்பதாக சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி ரிலீஸாக இருந்த நிலையில் தேர்தல் காரணமாக ரம்ஜான் பண்டிகையான மே 14 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது கொரோனா காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத இருக்கை அனுமதி, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு எனப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் டாக்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்வது மிகப்பெரிய சிக்கலாகியுள்ளது. அதனால் ஓடிடி ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அந்த படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனோ தேவை இல்லாமல் தியேட்டர் உரிமையாளர்களிடம் கெட்ட பெயர் வாங்கிக் கொள்ள வேண்டாம் என விஜய் மாஸ்டர் திரைப்படத்தை ரிஸ்க் எடுத்து தியேட்டரிலேயே ரிலீஸ் செய்தது போல டாக்டர் படமும் திரையரங்குகளில் வெளியாவதேயே விரும்புகிறாராம். ஆனால் தயாரிப்பாளரோ நல்ல விலை கிடைக்கும் ஓடிடியில் தள்ளிவிடுவதில் மும்முரமாக இருக்கிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்