அடுத்தடுத்து ஓடிடிக்கு செல்லும் விஜய் சேதுபதியின் 3 படங்கள்!

வியாழன், 22 ஏப்ரல் 2021 (17:41 IST)
கொரோனா இரண்டாவது அலை காரணமாக மீண்டும் திரையரங்குகளில் படங்கள் ரிலீஸாவது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள் கடந்த ஆண்டு இறுதியில் திறக்கப்பட்டாலும் மாஸ்டர் மற்றும் கரணன் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே லாபத்தைக் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது அலை காரணமாக மீண்டும் திரையரங்குகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் படங்கள் மறுபடியும் ஓடிடிக்கு செல்ல ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி கிடப்பில் இருக்கும் மாமனிதன், இடம் பொருள் ஏவல் மற்றும் துக்ளக் தர்பார் ஆகிய படங்கள் ஓடிடியில் ரிலீஸாவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்