மீண்டும் தந்தையாகிறாரா சிவகார்த்திகேயன்?

vinoth
வெள்ளி, 31 மே 2024 (08:16 IST)
பிரபல நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இரண்டாவது குழந்தை கடந்த 2021 ஆம் ஆண்டு பிறந்தது. ஆண் குழந்தையான இந்த குழந்தை பிறந்ததை அடுத்து தனது தந்தையே தனக்கு மகனாக பிறந்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் மகனுக்கு குகன் தாஸ் என்ற பெயரையும் சூட்டியிருந்தனர்.

இந்நிலையில் இப்போது சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயனின் குடும்ப உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் அவர் தன் மனைவியோடு கலந்துகொண்டார். அப்போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக தந்தையாக உள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனவே ஆராதனா என்ற பெண் குழந்தை உள்ளது என்பதும் அந்த குழந்தை சிவகார்த்திகேயன் தயாரித்த கனா திரைப்படத்தில் ஒரு பாடலை பாடி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் மகன் பெயரான குகன் தாஸ் என்ற பெயரை அவரது ரசிகர்கள் ஹேஷ்டேக் பதிவுசெய்து வைரலாகி வருகின்றனர். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்